இந்தியா

எல்.ஐ.சி பாலிசியை பான் எண்ணுடன் ஏன் இணைக்க வேண்டும்: முக்கிய தகவல்

Published

on

எல்ஐசி நிறுவனம் 5 சதவீத பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் இதன் முழு பலனையும் எல்ஐசி பாலிசிதாரர்கள் பெறவேண்டுமென்றால் எல்ஐசி பாலிசி எண்ணுடன் பான் கார்டு இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

ஐபிஓ ம்ற்றும் எல்ஐசி பங்குகளின் பலன்களை பெற கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களுடைய பான் எண்ணை, எல்ஐசி பாலிசி எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றும் அவ்வாறு இணைக்காவிட்டால் ஐபிஓ மூலம் கிடைக்கும் எந்த பலனையும் பாலிசிதாரர்கள் பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து எல்ஐசி பாலிசி எண்ணுடன் வரும் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் இதற்கு சரியான டீமேட் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எல்ஐசி பாலிசி எண்ணுடன் பான் கார்டை எப்படி இணைப்பது என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

எல்.ஐ.சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பான் கார்டு ரிஜிஸ்ட்ரேஷன் என்ற பக்கத்தில் சென்று பான், எல்.ஐ.சி பாலிசி எண், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட உங்கள் விவரங்களை வழங்க வேண்டும். இதனையடுத்து பான் எண்ணும், பாலிசி எண்ணும் இணைக்கப்பட்டதாக திரையில் மெசேஜ் வரும்.

பான்கார்டு எல்ஐசி பாலிசியுடன் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய
எல்ஐசியின் இணையதளத்தில் பாலிசியின் ஆயுள் காப்பீட்டு எண், பிறந்த தேதி, பான் அட்டை எண்ணை பதிவு செய்தால் உங்களது எல்ஐசி பாலிசி மற்றும் பான் இணைப்பு இணைந்ததை உறுதி செய்யும் மெசேஜ் தெரியும்.

 

seithichurul

Trending

Exit mobile version