கிரிக்கெட்

மும்பையில் முடியும்… மொஹாலியில் முடியாதா..? ஐபிஎல் குறித்து ஆத்திரம் அடைந்த பஞ்சாப் முதல்வர்

Published

on

மும்பையில் ஐபிஎல் போட்டியை நடத்த முடியும் என்றால் மொகாலியில் நடத்த முடியாதா என பஞ்சாப் முதல்வர் ஆவேசமாக தனது கருத்தை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளிவந்தது என்பது தெரிந்ததே. ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பிக்கும் ஐபிஎல் போட்டிகள் மே மாதம் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டி சென்னையிலும் இறுதிப்போட்டி அகமதாபாத்திலும் நடைபெற உள்ளது.

மேலும் இந்த போட்டிகள் அனைத்தும் சென்னை, மும்பை, பெங்களூர், அகமதாபாத், கொல்கத்தா மற்றும் பெங்களூரு ஆகிய ஆறு மைதானங்களில் மட்டுமே நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மற்ற மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மொகாலியில் ஏன் ஐபிஎல் போட்டிகள் நடத்தவில்லை என கேள்வி எழுப்பி பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் பிசிசிஐக்கு ஆவேசமாக எழுதியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமும் பத்தாயிரத்துக்கும் மேல் கொரோனா பாதிப்புகள் பதிவாகும் மும்பையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த முடியும் என்றால் குறைவான கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்படும் மொஹாலியில் நடத்த முடியாதா? என்று அவர் அந்த கடிதத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு பிசிசிஐ என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version