தமிழ்நாடு

பிரபாகரன் உயிரோடு வந்தால் பேசுவோம்: பழ.நெடுமாறனுடன் சீமான் முரண்பாடு!

Published

on

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் உள்ளார் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டார். இந்நிலையில் இவரது கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் முரணாக பேசியுள்ளார்.

#image_title

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், சர்வதேச சூழலும், இலங்கையின் ராஜபக்‌ஷே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழீழத் தேசிய தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறோம். தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க இருக்கிறார் என தெரிவித்தார்.

#image_title

இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் சில கேள்விகள் உள்ளன. என் தம்பி சின்னவன் பாலச்சந்திரனை சாகக் கொடுத்துவிட்டு என் அண்ணன் பத்திரமாக தப்பிப் போயிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? கடைசி வரை இந்த நாட்டை விட்டு போகமாட்டேன் என்று வீரமாக சண்டை செய்தவர், தன் உயிரை மட்டும் பத்திரமாக தற்காத்துக் கொண்டு தப்பிப் போகிற கோழை என்று நினைக்கிறீர்களா?

போர் முடிந்து 15 ஆண்டுகளாக எதுவுமே பேசாமல் அவர் பதுங்கியிருப்பார் என நினைக்கிறீர்களா? சொல்லிவிட்டு வருபவர் அல்ல அவர், வந்துவிட்டு சொல்வார். அவரை நன்கு அறிந்தவர்களுக்கு இது தெரியும். எனவே தேவையற்றதை போட்டு குழப்பிக் கொண்டிருக்க வேண்டாம். அவரே சொல்கிறார் ஒரு நாள் மக்களுக்கு முன் தோன்றுவார் என்று. அப்படி தோன்றும்போது பேசுவோம் என்றார் சீமான்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version