தமிழ்நாடு

ஆளுநர் மாளிகையில் ஆலோசிக்கலாம்.. நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு!

Published

on

புதுச்சேரி: இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பேட்டி அளித்து உள்ளார்.

புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மாநில துணை நிலை ஆளுநர் எதிராக இருப்பதாக கூறி முதல்வர் நாராயணசாமி போராடி வருகிறார். இந்த நிலையில் இந்த போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த போராட்டம் குறித்து பொதுவில் விவாதம் செய்ய தயாரா என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பேட்டி அளித்து இருந்தார். பொதுவில் ஒரு இடம், நேரம் குறிப்பிட்டு மக்கள் முன்னிலையில் விவாதம் செய்ய முடியுமா என்று கிரண்பேடி சாவல் விடுத்து இருந்தார்.

இந்த சவாலை ஏற்றுக்கொண்ட புதுவை முதல்வர் நாராயணசாமி, கிரண்பேடியுடன் நேருக்கு நேர் மோத நாங்கள் தயார். கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை முன் பொதுமக்கள் மத்தியில் எப்போது வேண்டுமானாலும் விவாதிக்க தயார் என்று குறிப்பிட்டார்.

seithichurul

Trending

Exit mobile version