சினிமா செய்திகள்

ஓடிடிக்கு படம் நடிக்கும் பிரபல நடிகர்: சம்பளம் ரூ.223 கோடி!

Published

on

திரையரங்குகளுக்காக திரைப்படங்கள் தயாரித்து வேறு வழியில்லாமல் ஓடிடியில் வெளியிடப்பட்டு வந்த நிலையில் தற்போது ஓடிடிக்காகவே படங்கள் தயாரிக்கப்படும் சூழல் ஏற்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திரையரங்குகள் திறக்கப்பட்டு இயல்புநிலை திரும்பினாலும் ஓடிடிக்கு என ஒரு தனி படங்கள் உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது என்பதும் பிரபல நடிகர்களும் கூட ஓடிடிக்கு படங்களில் நடிக்க தற்போது முன் வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் ஓடிடிக்காக தயாரிக்கப்படும் படம் ஒன்றில் நடிக்க பிரபல நடிகர் ஒருவர் ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில் அவருக்கு ரூபாய் 223 கோடி சம்பளம் என்று செய்தி வெளியாகியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த நடிகர் பிரபல ஹாலிவுட் நடிகரும் ’டைட்டானிக்’ படத்தின் நாயகனுமான லியானார்டோ டிகாப்ரியோ என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ, ஆடம் மெக்கே என்பவரின் இயக்கத்தில் ’டோண்ட் லுக் அப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். நெட்பிளிக்ஸ் ஓடிடிக்காக தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் நடிக்க அவருக்கு ரூ 223 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

அதே போல் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் ஜெனிபர் லாரன்ஸ்க்கு ரூ.186 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இருவரின் சம்பளம் மட்டுமே கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் என்னவாக இருக்கும்? இந்த படத்தின் வியாபாரம் என்னவாக இருக்கும்? என்ற மிகப்பெரிய ஆச்சரியம் திரையுலக வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version