இந்தியா

கேரள தேர்தல்: பாஜக-வை பின்னுக்குத் தள்ளும் இடதுசாரிகள் கூட்டணி..!

Published

on

கேரள உள்ளாட்சித் தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் மூன்று கட்டமாகக் கடந்த வாரம் நடத்தப்பட்டது. இன்று வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகின்றது. வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது முதலே இடதுசாரிகள் கூட்டணியினர் முன்னிலையில் இருந்து வருகின்றனர். இந்தத் தேர்தலில் கொரோனா அச்சம் இருந்த போதிலும் 76 சதவிகித மக்கள் வந்து வாக்களித்துள்ளனர்.

கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளுடன் மிகவும் கவனமாக நடத்தப்பட்ட இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணியும் மிகவும் பாதுகாப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப் பஞ்சாயத்துகளுக்காக நடந்த தேர்தலில் அனைத்திலும் தற்போதைய நிலவரப்படி இடதுசாரிகளின் கூட்டணியே அதிகம் இடங்களில் பெரும்பான்மையில் உள்ளனர்.

பல இடங்களில் அடுத்தடுத்த இடங்களில் காங்கிரஸ் கூட்டணி இரண்டாம் இடங்களிலும் பாஜக கூட்டணி மூன்றாம் இடங்களிலும் உள்ளனர்.

 

seithichurul

Trending

Exit mobile version