சினிமா செய்திகள்
‘அந்தகன்’ படத்தில் இணைந்த மணிரத்னம் பட நடிகை!
![andhagan1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/03/andhagan1.jpg)
நடிகர் பிரசாந்த் நடிப்பில் அவரது தந்தையும் இயக்குனருமான தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அந்தகன்’. பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அந்தாதூன் என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் பிரசாந்துடன் சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தில் பிரியா ஆனந்த், வனிதா, கார்த்திக், யோகிபாபு, கேஎஸ் ரவிக்குமார், ஊர்வசி, மனோபாலா மற்றும் நடிக்கிறார்கள் என்பதும் சமீபத்தில் இந்த படத்தில் நடிகர் சமுத்திரகனி இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்டார் நிறுவனம் தயாரிப்பில் ரவி யாதவ் ஒளிப்பதிவில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் லீலா சாம்ஸன் என்ற நடிகை இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி மற்றும் ஆதித்ய வர்மா, சில்லு கருப்பட்டி உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை சென்சார் போர்டில் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.