உலகம்

தொடரும் வேலைநீக்க துயரம்.. பட்டியலில் இணைந்த HP நிறுவனம்..!

Published

on

கடந்த சில மாதங்களாக வேலைநீக்க செய்தி வராத நாளே இல்லை என்ற அளவிற்கு தினந்தோறும் ஏதாவது ஒரு பெரிய நிறுவனம் அல்லது ஸ்டார்ட் அப் நிறுவனம் வேலை நீக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். வேலை நீக்க நடவடிக்கை எடுத்த நிறுவனங்களின் பட்டியலில் கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இணைந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட் ஆக இணைந்த நிறுவனம் HP என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான HP நிறுவனம் 100 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் பெரும்பாலான பணி நீக்கங்கள் டிஜிட்டல் பிரிண்டிங் இயந்திரங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் என்றும் கூறப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள HP நிறுவனங்களில் 2025 ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 4000 முதல் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாகவும், இது அதன் பணியாளர்களில் 7 முதல் 11 சதவீதம் என்றும் கூறப்படுகிறது. 2025 ஆம் தேதி ஆண்டிற்குள் குறைந்தபட்சம் 1.14 பில்லியன் டாலர் மொத்த செலவை குறைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் மறு சீரமைப்பு மற்றும் பிற கட்டணங்கள் தோராயமாக ஒரு பில்லியன் என கணக்கிட்டு இருப்பதால் எதிர்காலத்திற்காக தயாராக இருக்கும் திட்டங்கள் குறித்த அறிவிப்பை HP வெளியிட்டுள்ளது.

தற்போதைய சந்தை சவால்களுக்கு ஏற்ப முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது என்றும் அதனால் வேலைநீக்க நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்றும் HP அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. HP நிறுவனம் புதுமைகளை உருவாக்கி வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்ற நிறுவனம் என்ற நிலையில் வேலை நீக்க நடவடிக்கையை அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிநவீன தொழில்நுட்ப சந்தையில் டிஜிட்டல் பயமாக்குவதில் HP நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது என்றும் வெளிப்படை தன்மை, நேர்மை, மரியாதை ஆகியவை மக்கள் மத்தியில் நிறைந்துள்ள நிறுவனமாக HP நிறுவனம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நெதன்யா கிளையில் HP தனது 60 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது என்பதும் இதனை அடுத்து தற்போது 100 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ட்விட்டர், மைக்ரோசாப்ட், மெட்டா, கோல்டுமேன் சாக்ஸ், கூகுள் போன்ற பல நிறுவனங்கள் பணி நீக்க பட்டியலில் இணைந்த நிலையில் தற்போது HP நிறுவனமும் இணைந்துள்ளது துரதிஷ்டவசமானது என்று கூறப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version