தமிழ்நாடு

சட்டக்கல்லூரிகளில் எப்போது விண்ணப்பிக்கலாம்: சட்டப்பல்கலை அறிவிப்பு!

Published

on

சட்டப் படிப்புகளில் சேர ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மாணவர்கள் சட்ட படிப்புக்கு விண்ணப்பம் செய்ய தயாராகி வருகின்றனர்

சமீபத்தில் பிளஸ்டூ மதிப்பெண்கள் வெளியானதை அடுத்து கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். ஏற்கனவே பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியதை அடுத்து மாணவர்கள் விண்ணப்பம் செய்து வருகின்றனர் என்பதும் பல மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்து விட்டனர் என்றும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் சட்டப் படிப்புகளில் சேர ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சட்டப்படிப்புக்கு சேர www.tndalu.c.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கபட்டுள்ளது.

ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் மாணவர்கள் சட்டப்படிப்புக்கு மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பம் செய்து சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து பிளஸ் டூ முடித்துவிட்டு சட்டக் கல்லூரிகளில் நேரடியாக சேர விரும்பும் மாணவர்கள் உடனடியாக ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version