சினிமா செய்திகள்

லன்ச்பாக்ஸ் இயக்குநரின் அடுத்த படைப்பு – போட்டோகிராப் டிரைலர் ரிலீஸ்!

Published

on

ஆஸ்கர் ரேசுக்கு இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட லன்ச் பாக்ஸ் படத்தை இயக்கிய ரித்தேஷ் பாத்ரா இயக்கத்தில் நவாசுதின் சித்திக், சான்யா மல்கோத்ரா நடிப்பில் உருவாகியுள்ள போட்டோகிராப் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

இர்பான் கான், நவாசுதின் சித்திக், நிம்ரத் கவுர் நடிப்பில் 2013ல் வெளியான லன்ச் பாக்ஸ் உலகளவில் பல விருதுகளை அள்ளியது. மேலும், இந்திய அரசு சார்பில் ஆஸ்கர் ரேசுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த படத்தை இயக்கிய ரித்தேஷ் பாத்ரா, தற்போது போட்டோகிராப் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நாயகனாக நவாசுதின் சித்திக்கும் நாயகியாக டங்கல் படத்தில் கீதா போகட்டின் தங்கையாக நடித்திருந்த நடிகை சான்யா மல்கோத்ரா நாயகியாக நடித்துள்ளார்.

ஒரு புகைப்படக் கலைஞரின் வாழ்க்கையில் அவர் சந்திக்கும் ஒரு பெண்ணுக்கும் அவருக்கும் ஏற்படும் காதல் மற்றும் அதிலிருந்து உருவாகும் பிரச்னை என கதையின் களம் உருவாகியுள்ளது.

அமேசான் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் மார்ச் 15ம் தேதி படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version