இந்தியா

ப்ளூடூத், இயர்போன் வசதியுடன் அதிநவீன மாஸ்க்: விலை என்ன தெரியுமா?

Published

on

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது என்பதும் தினமும் லட்சக்கணக்கானோர் உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் உயிரிழந்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி போடவும் அனைவரும் இன்னும் சில ஆண்டுகளுக்கு மாஸ்க் அணிந்து தான் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மருந்துக்கடைகளில் மாஸ்குகள் விற்பனையாகி வரும் நிலையில் அதிநவீன மாஸ்க் ஒன்றை ஸ்பேஸ் நிறுவன ஊழியர் ஒருவர் தயாரித்து உள்ளார்.

அவர் வடிவமைத்த இந்த அதிநவீன மாஸ்க்கில் ப்ளூடூத், இயர்போன், எல்இடி போன்ற வசதிகள் இருப்பதாகவும் இந்த மாஸ்க்கை அவ்வப்போது சார்ஜ் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. தற்போது விற்பனைக்கு வந்துள்ள இந்த அதிநவீன மாஸ்ஸ்க்கின் விலை இந்திய மதிப்பில் ரூபாய் 21 ஆயிரம் என தகவல் வந்துள்ளது. 5 ரூபாய்க்கும் 10 ரூபாய்க்கு மாஸ்க் கிடைக்கும் நிலையில் 21 ஆயிரம் ரூபாய் செலவழித்து இந்த அதிநவீன மாஸ்க்கை வாங்குபவர்கள் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version