இந்தியா

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை பின்னடைவு..!

Published

on

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அண்மையில் கோவிட்-19 உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் இசை குயில் எனப் போற்றப் படும் லதா மங்கேஷ்கர் பாரத ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். 92 வயதான இவருக்கு ஜனவரி 11-ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது.

தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு அவரது வீட்டு பணியாட்கள் மூலம் கொரோனா தொற்று தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று உடன் நிமோனியா பாதிப்பும் உள்ளது. ஐசியுவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர் சரியாக இன்னும் காலம் எடுக்கும். அதுவரையில் இவரை பார்க்க யாருக்கும் அனுமதி கிடையாது. ஆனால் இது எவ்வளவு நாட்கள் எனவும் கூற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version