கிரிக்கெட்

டிராவில் முடிந்த கடைசி டெஸ்ட்: தொடரை வென்றது இந்தியா!

Published

on

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி 9-ஆம் தேதி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது.

#image_title

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய அந்த அணி 480 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 180 ரன்களும், கேமரான் க்ரீன் 114 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி மிக அற்புதமாக விளையாடி 571 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக 186 ரன்கள் அடித்தார் விராட் கோலி, அவருக்கு அடுத்தபடியாக 128 ரன்கள் எடுத்தார் ஷுப்மன் கில். இதன் மூலம் இந்திய அணி 91 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இன்றைய 5-ஆம் நாள் முடிவில் 175 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து டிக்ளேர் செய்தது.

இதன் மூலம் இந்த போட்டி வெற்றி, தோல்வி இன்று சமனில் முடிந்துள்ளது. இந்த போட்டி சமனில் முடிந்தாலும் ஏற்கனவே இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதால் இந்த தொடரை கைப்பற்றி வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை விராட் கோலியும், தொடர் நாயகன் விருதை ரவிச்சந்திரன் அஸ்வினும் பெற்றுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version