கிரிக்கெட்

கடைசி ஓவரில் ஹீரோவான நடராஜன்: இந்தியா த்ரில் வெற்றி!

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரை வீசிய நடராஜன் ஹீரோவாகிய நிலையில் இந்தியா போட்டியையும் தொடரையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஷிகர் தவான் ஆகியோரின் அபார ஆட்டம் காரணமாக 48.2 ஓவர்களில் 329 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 330 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பெயர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர்களின் விக்கெட்டுகள் மளமளவென விழுந்துவிட்டன இருப்பினும் மலான் ஓரளவுக்கு நிலைத்து ஆடி 50 ரன்கள் எடுத்த நிலையில் 6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சாம் கர்ரன் மிக அபாரமாக விளையாடி 95 ரன்கள் எடுத்தார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டிய நிலையில் சாம் கர்ரன் அந்த ரன்களை அடித்து தனது அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்து விடுவார் என்று கருதப்பட்டது
ஆனால் கடைசி ஓவரை வீசிய தமிழக யார்க்கர் கிங் நடராஜன் மிக அபாரமாக வீசி 5 ரன்களை மட்டுமே கொடுத்ததை அடுத்து இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனை அடுத்து கடைசி வரை மிக சிறப்பாக வீசி நடராஜன் ஹீரோவானார் என்பதும் ஆட்டநாயகன் விருதை பெற்று சாம் கர்ரன் பெற்று அவருடைய அணிக்கு ஹீரோவானார் என்பதும் குறிப்பிடத்தக்கது/

நேற்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது என்பதும் தொடர் நாயகன் விருதை பெயர்ஸ்டோ பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version