தமிழ்நாடு

நாளை முதல் முழு ஊரடங்கு: சென்னையில் இருந்து இன்று கிளம்பும் கடைசி பேருந்து எத்தனை மணிக்கு?

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின்போது எந்தவித போக்குவரத்திற்கும் அனுமதி இல்லை என்பதால் நேற்றும் இன்றும் சென்னையில் இருந்து பல தங்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுத்தனர். இதனால் பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் ஆகியவற்றில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது

நேற்று போலவே இன்றும் பல பயணிகள் பேருந்துகளிலும் ரயில்களிலும் பயணம் செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் இன்று இரவு சென்னையில் இருந்து கிளம்பும் கடைசி பேருந்து எத்தனை மணிக்கு என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது

இது குறித்து தமிழக அரசின் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

சென்னையில் இருந்து மாலை 6 மணிக்கு மார்த்தாண்டத்துக்கும், இரவு 7 மணிக்கு நாகர்கோவிலுக்கும் கடைசி சிறப்பு பேருந்து!

சென்னையில் இருந்து இரவு 7 மணிக்கு தூத்துக்குடிக்கும், இரவு 7.30 மணிக்கு செங்கோட்டைக்கும் கடைசி சிறப்பு பேருந்து!

சென்னையில் இருந்து இரவு 8 மணிக்கு திருநெல்வேலிக்கும், திண்டுக்கல்லுக்கும் கடைசி சிறப்பு பேருந்து!

சென்னையில் இருந்து இரவு 11.30 மணிக்கு மதுரைக்கும், 11.45க்கு திருச்சிக்கும் கடைசி சிறப்பு பேருந்து!

author avatar
seithichurul

Trending

Exit mobile version