தமிழ்நாடு

10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பயிற்றுமொழி இணைப்பு: ஏன் தெரியுமா?

Published

on

10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிதாக பயிற்றுமொழியை செய்யப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் எந்த பயிற்று மொழியில் பயின்றனர் என்ற விபரம் வகுப்பு வாரியாக சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

குறிப்பாக நடப்பு கல்வி ஆண்டிற்கான 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிதாக பயிற்றுமொழி சேர்க்கப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் பயிற்றுமொழி விபரங்களை தனித்தனியே இணையத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் எந்த பயிற்று மொழியில் பயின்றனர் என்ற விவரம் வகுப்பு வாரியாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்தே இந்த புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து வகுப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version