தமிழ்நாடு

உயிரோடு இருப்பவருக்கு இறப்பு சான்றிதழ்: போலி உயில் தயாரித்து சொத்துக்கள் மோசடி!

Published

on

புதுச்சேரியை அடுத்த காரைக்கால் என்ற பகுதியில் உயிரோடு இருப்பவருக்கும் இறப்பு சான்றிதழ் தயார் செய்து, போலி உயில் ஒன்றும் தயார் செய்து கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த குமார் ஆனந்த் என்பவர் பிரெஞ்சு குடியுரிமை பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். இவரது பெயரில் காரைக்கால் மாவட்டத்தில் பல இடங்களில் வீடுகள், விளைநிலங்கள் உள்ளன.

இந்த நிலையில் குமார் ஆனந்த் பெற்றோரை இழந்துவிட்ட நிலையில் சொத்துக்களை பகுதி பகுதியாக பிரித்து தனது உறவினர்களிடம் ஒப்படைத்து அதனை நிர்வகித்து கொள்ள அனுமதி வழங்கினார்.

இந்த நிலையில் குமார் ஆனந்தின் தாய் மாமனான தேவராஜன் என்பவர் தன் வசம் பராமரிப்பில் உள்ள சொத்துக்களை அபகரிக்க எண்ணி, கடந்த 2008ஆம் ஆண்டு குமார் ஆனந்த் இறந்து விட்டது போல போலியான இறப்புச் சான்றிதழை தயாரித்துள்ளார். மேலும் கடந்த 1996ஆம் ஆண்டு குமார் ஆனந்த் தனது பெயரில் உள்ள சொத்துக்களை தேவராஜ் பெயருக்கு மாற்றியதாகவும் போலி உயில் தயாரித்துள்ளார்.

இந்த உயில் மற்றும் இறப்பு சான்றிதழை வைத்து குமார் ஆனந்த் சொத்துக்களை பாஸ்கரன் மற்றும் இளங்கோவன் ஆகியோர்களுக்கு விற்கவும் அவர் திட்டமிட்டார். அதன்படி திருநள்ளாறு சார்பதிவாளர் முருகானந்தம் என்பவரை அணுகியபோது ஆவணங்கள் மீது சந்தேகம் கொண்டு பத்திரப்பதிவு செய்ய அவர் மறுத்துள்ளார். இதனையடுத்து முருகானந்தம் விடுமுறையில் சென்ற நாளாக பார்த்து வேறொரு சார்பு ஆய்வாளர் உதவியுடன் கடந்த மாதம் பத்திரப் பதிவு செய்துள்ளார்.

இந்த தகவல் குமார் ஆனந்த் உறவினர்கள் மத்தியில் மெல்ல கசியத் தொடங்கி உள்ளது. அவர்கள் திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகாரளிக்க போலி உயில் மற்றும் போலி இறப்புச் சான்றிதழ் விவகாரம் வெளியே தெரியவந்தது. இதனை எடுத்து தேவராஜ் மீதும் சொத்துக்களை வாங்கிய பாஸ்கர், இளங்கோவன் எழுதிய ஆவண எழுத்தர் மற்றும் போலி ஆவணங்களைக் கொண்டு சொத்துக்களை விற்க பத்திரபதிவு சார் பதிவாளர் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version