இந்தியா

‘மரணித்தாலும் பின்வாங்கமாட்டேன்!’- 3 ஆண்டுச் சிறைக்குப் பின்னர் வெளியே வந்த லாலு அதிரடி பேச்சு

Published

on

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், சுமார் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறையிலிருந்து பிணை கிடைத்து வெளியே வந்துள்ளார். மாட்டுத் தீவன ஊழலில் கைது செய்யப்பட்ட லாலு, சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் முதல் முறையாக பேசி வீடியோ வெளியிட்டு உள்ளார்.

காணொலியில் லாலு, ‘நான் சீக்கிரம் சிறை பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவேன். தற்போது எனது உடல்நிலை நலிவுற்று இருந்தாலும் விரைவில் அதிலிருந்தும் வெளியே வருவேன். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிரான எனது போராட்டம் வீரியத்துடன் தொடரும். நான் இறந்து போவேனே தவிர பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை.

நான் விரைவில் பாட்னாவுக்கு வந்து மக்களைச் சந்திப்பேன். பாட்னாவுக்கு மட்டுமல்ல பீகாரின் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் செல்வேன். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். நமது கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் வலுவாக உள்ளது. தற்போது அதை தேஜஸ்வி யாதவ் நன்றாக வழிநடத்தி வருகிறார். அதனால் தொண்டர்கள் நம்பிக்கையுடன் இருங்கள்.

ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கொரோனாவை சரியாக கையாளுதல் மிகப் பெரிய பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டு வருகிறது. அனைத்து எதிராகவும் விரைவில் களம் காண்பேன்’ என்று கூறியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version