சினிமா செய்திகள்

விஜய் சேதுபதிக்கு வில்லியான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்!

Published

on

அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள சிந்துபாத், திரைப்படம் பல தடங்களுக்கு பிறகு வருகிற ஜூன் 28ம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில், அந்த படத்தை திரையிட வேண்டாம் என லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் திடீரென முட்டுக் கட்டை ஒன்றை போட்டுள்ளார்.

வருகிற வெள்ளிக்கிழமை லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹவுஸ் ஓனர் திரைப்படம் வெளியாக உள்ளதால், இந்த வாரமும் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்ற குளறுபடியில் இருக்கும் சிந்துபாத் படத்தை சிப்பாய் போல நின்று விஜய்சேதுபதி தடுக்க வேண்டும் என லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

விஜய் சேதுபதி போன்ற பெரிய நடிகர்களின் படம் வெளியீட்டு சிக்கலால், தனது சிறு பட்ஜெட் படம் சிக்கலை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version