சினிமா

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பிரபல இயக்குநர் மீது பாலியல் புகார்!

Published

on

சொல்வதெல்ல்லாம் உண்மை நிகழ்ச்சி புகழ் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தேசிய விருது பெற்ற பிரபல மலையாள இயக்குநர் ஹரிஹரன் மீது பரபரப்பு பாலியல் புகார் ஒன்றை கூறியுள்ளார். இது கேரளா திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மீடூ இயக்கத்தின் மூலம் பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து பெரும் பரபரப்பு உருவாகியது. குறிப்பாக பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த மீ டூ இயக்கத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்தார்.

இந்நிலையில் மலையாள இயக்குநரான ஹரிஹரன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். ஹரிஹரன் பழசிராஜா படத்தை இயக்கியபோது திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்று இருந்தேன். அப்போது ஹரிஹரனிடம் இருந்து மாலை சந்திக்கலாம் என்ற குறுந்தகவல் வந்தது. நான் அன்றைக்கு மாலையே சென்னை திரும்ப டிக்கெட் எடுத்திருந்தேன். அதனால் நிகழ்ச்சி முடித்து விட்டு சென்னை கிளம்பும் வழியில் நானே வந்து பார்த்துவிட்டுப் போகிறேன் என்றேன். ஆனால் இல்லை இன்று இரவு தங்குங்கள். நான் இங்கே வந்ததே உங்களைப் பார்க்கத்தான் என்றார் அவர்.

என்னென்ன கெட்ட வார்த்தைகள் என் வாயில் இருந்து வந்ததோ அத்தனையையும் செய்தியாக அனுப்பி விட்டு கிளம்பி வந்துவிட்டேன் என லட்சு ராமகிருஷ்ணன் தற்போது கூறியுள்ளது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இயக்குநர் ஹரிஹரன் மலையாளத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும், மூன்று முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.

Trending

Exit mobile version