தமிழ்நாடு

என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன்: பாஜக அதிர்ச்சி!

Published

on

புதுவையில் 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு திமுக எம்எல்ஏ திடீரென ராஜினாமா செய்ததால் அம்மாநிலத்தில் நடந்து வந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி சமீபத்தில் கவிழ்ந்தது. இந்த நிலையில் தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புதுவையில் ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஒருவர் லட்சுமி நாராயணன். இவர் பாஜகவின் பின்னணியை சேர்ந்தவர் என்றும் அதனால் பாஜகவின் பேச்சை கேட்டு தான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் என்றும் விரைவில் அவர் பாஜகவில் இணைய இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் சற்றுமுன் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸில் இணைந்து உள்ளார். என்ஆர் காங்கிரஸ் கட்சியில் லட்சுமி நாராயணன் இணைந்தது குறித்து அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி கூறியபோது ’நான் முதல்வராக இருந்தபோது நல்ல முறையில் பணியாற்றியவர் லட்சுமி நாராயணன் என்றும், ஆளும் கட்சியில் இருந்த போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லக் கூடியவர் என்றும் தெரிவித்தார்.

மேலும் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் புதுச்சேரியில் மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தவில்லை என்றும் என்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள்நலன் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் லட்சுமி நாராயணன் என்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது எங்கள் கட்சிக்கு மேலும் வலுவூட்டும் வகையில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கூட்டணி குறித்து எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்போம் என்றும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் ரங்கசாமி பேட்டியில் தெரிவித்துள்ளார்

லட்சுமி நாராயணன் தங்கள் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்த்த பாஜகவுக்கு இது அதிர்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version