வைரல் செய்திகள்

இந்தியாவில் கொரோனாவை நெருங்கவிடாத ஊர்…!- தப்பித்தது எப்படி?

Published

on

இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் தப்பித்த ஒரே பகுதியாக லட்சத்தீவுகள் உள்ளன.

அரபிக் கடல் பகுதிகளில் அமைந்திருக்கிறது இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான லட்சத்தீவுகள். கொரோனா பாதிப்பு உலகையே உலுக்கி எடுத்த போதும் கூட இங்கு யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை. இச்செய்தி மிகவும் ஆச்சர்யமாக இருந்தாலும் இப்பகுதி நிர்வாகமும் மக்களும் கடுமையான நடவடிக்கைகளைப் பின்பற்றியதால் மட்டுமே வைரஸ் பரவலில் இருந்து தப்ப முடிந்ததாகத் தெரிவித்து வருகின்றனர்.

முதன்முறையாக 2020 ஜனவரி மாதம் சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த முதல் செய்தி வெளியான போதே லட்சத்தீவுகளில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குக் கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் முதல் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளைப் போல் முகக்கவசம், கிருமிநாசினி, தடைகள் என எதுவுமின்றி அப்பகுதி மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்.

Trending

Exit mobile version