சினிமா செய்திகள்

லைலா ரிட்டர்ன்ஸ் – யுவன் சங்கர் ராஜா படத்தில் நடிக்கிறார்!

Published

on

அஜித்துடன் தீனா, விக்ரமுடன் தில், பிரபுதேவாவுடன் அள்ளித் தந்த வானம், சூர்யாவுடன் நந்தா, பிதாமகன், பிரசன்னாவுடன் கண்டநாள் முதல் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை லைலா நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளார்.

சமீபத்தில் கண்டநாள் முதல் படக்குழுவுடன் லைலா புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதனை பதிவிட்டு, கண்டநாள் முதல் 2? என பிரசன்னா ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், யுவன்சங்கர் ராஜா தயாரிப்பில் மணி சந்துரு இயக்கத்தில் பியார் பிரேமா காதல் படத்தின் நாயகி பிக்பாஸ் புகழ் ரைஸா நடிப்பில் உருவாகி வரும் ஹாரர் படமான ஆலிஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க லைலா ஒப்பந்தமாகியுள்ளார்.

Trending

Exit mobile version