ஆரோக்கியம்

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

Published

on

வெண்டைக்காய் பொதுவாக ஆரோக்கியமான காய்கறியாக கருதப்படுகிறது. இதில் நிறைய சத்துக்கள் உள்ளன, இது எடையைக் குறைப்பதிலும், செரிமானத்தை மேம்படுத்துவதிலும், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதிலும் உதவுகிறது. ஆனாலும், சிலருக்கு வெண்டைக்காய் உட்கொள்வது நல்லதல்ல. சிலருக்கு இது அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெண்டைக்காய் யாருக்கு விஷம்?

வெண்டைக்காயில் “லெக்டின்” என்ற புரதம் உள்ளது, இது சிலருக்கு அலர்ஜி பிரச்சனையை உருவாக்கும். அலர்ஜி இருப்பவர்கள் வெண்டைக்காய் சாப்பிட்டால், அரிப்பு, தடிப்பு, மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தென்படும். மேலும், வெண்டைக்காயில் அதிக நார்ச்சத்து இருப்பதால், இது சிலருக்கு வாயு பிரச்சனைகளை ஏற்படுத்தி வயிற்று வீக்கம் போன்ற சிரமங்களை தரக்கூடும்.

அலர்ஜி உள்ளவர்கள்: வெண்டைக்காய் சாப்பிடுவதால் அரிப்பு, தடிப்பு, கொப்புளங்கள், மூச்சு திணறல் போன்ற அலர்ஜி அறிகுறிகள் தென்பட்டால், உடனே சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

செரிமான பிரச்சனை உள்ளவர்கள்: செரிமானக் குறைபாடுகள் கொண்டவர்கள், குறிப்பாக மலச்சிக்கல், வயிற்று வீக்கம் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் இருந்தால், வெண்டைக்காய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள்: வெண்டைக்காய் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் காய்கறி. எனவே, நீங்கள் இன்சுலின் மாத்திரை எடுத்துக் கொண்டால், வெண்டைக்காயை உட்கொள்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்: கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும் வெண்டைக்காய் சாப்பிடுவது முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள்: சிறுநீரக கல் பிரச்சனையால் அவதிப்படும் நபர்கள் வெண்டைக்காயை தவிர்க்க வேண்டும். இதன் காரணம், வெண்டைக்காயில் உள்ள கால்சியம் ஆக்சலேட் சிறுநீரக கல் பிரச்சனையை மோசமாக்கக்கூடும்.

வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

வெண்டைக்காயில் வைட்டமின் சி, ஃபோலேட், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இது எடையைக் குறைக்க, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, மற்றும் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

Poovizhi

Trending

Exit mobile version