செய்திகள்

ஓடும் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிய வாலிபர்… காப்பாற்றிய பெண் காவலர்கள்(வீடியோ)…

Published

on

சரியாக ரயில் புறப்படும் நேரத்தில் ஓடிவந்து ஓடும் ரயிலில் அவசர அவசரமாக ஏறுவதையும், ரயில் நிற்கும் முன்பே இறங்க முயல்வதையும் பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். அதுபோன்ற நேரத்தில் கால் இடறி தண்டவாளத்தில் விழுந்து மரணமடைய வாய்ப்புண்டு. இதை அறியாமல் அவர்கள் இதுபோன்ற விபரீதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுபோன்ற நபர்களை ரயில்வே நடைமேடையில் பணியில் இருக்கும் காவலர்கள் ஓடி சென்று காப்பாற்றும் வீடியோ அடிக்கடி வெளியாகி வருகிறது. சில சமயம் ரயிலில் தற்கொலை செய்து கொள்ள சிலர் பாயும் போது தன் உயிரை துச்சம் என மதித்து ரயில்வே காவலர்கள் அதை தடுக்கும் வீடியோவும் அடிக்கடி வெளியாவதுண்டு.

இந்நிலையில், சேலம் ரயில்வே நிலையத்தில் வேகமாக வந்த எர்ணாகுளம் விரைவு ரயில் நிற்பதற்கு முன்பே வாலிபர் ஒருவர் இறங்க முயல அவர் நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே சிக்கிக்கொண்டார். இதைக்கண்ட ரயில்வே பெண் போலீசார் இருவர் ஓடி சென்று அவரை காப்பாற்றும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் சிவன்குமார்(20) என்பதும், ஜாகர்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹட்டியா எனும் இடத்திலிருந்து எர்னா குளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார். சேலத்தில் இறங்கி ஈரோடு செல்ல அவர் திட்ட்டிருந்ததும் தெரியவந்தது.

அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ரயில்வே போலீசார் அவருக்கு சிகிச்சை அளித்து ஈரோடு செல்லும் ரயிலில் அவரை ஏற்றிவிட்டனர். அவரை காப்பாற்றிய பெண் காவல்துறை அதிகாரிகளை உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version