உலகம்

லடாக்கில் பெரும் பனிச்சரிவு.. சிக்கிய 10 பேர்.. ஒருவர் பலி!

Published

on

ஸ்ரீநகர்: லடாக்கில் ஏற்பட்ட பனிச்சரிவில் அங்கு மலை ஏற்றம் செய்து கொண்டு இருந்த 10 பேர் சிக்கிக்கொண்டுள்ளனர். இதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை தேசிய பேரிடர் மேலாண்மையும், மாநில பேரிடர் மேலாண்மையும் முக்கியமான எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, காஷ்மீரில் உள்ள 9 இடங்களில் மலை ஏற்றம் செல்ல கூடாது என்று கட்டுப்பாடு விதித்து இருந்தது.

இந்த நிலையில் இன்று லடாக்கில் அதேபோல் பனிச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. லடாக்கில் கார்த்துங் லா பகுதியில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது.

லடாக்கில் ஏற்பட்ட பனிச்சரிவில் அங்கு மலை ஏற்றம் செய்து கொண்டு இருந்த 10 பேர் புதைந்தனர். இவர்கள் 10 பேரும் சுற்றுலா பயணிகள் என்று கூறப்படுகிறது.

பனிச்சரிவில் சிக்கிய 10 பேர் ஒருவர் பலியாகிவிட்டார் என்று கூறுகிறார்கள். மீதமுள்ள 9 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு தற்போது மாநில பேரிடர் மீட்பு படை தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

Trending

Exit mobile version