வேலைவாய்ப்பு

தமிழக மருத்துவத்துறையில் லேப் டெக்னீசியன் (ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா்) வேலை!

Published

on

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் தற்பொழுது ஒப்பந்த மற்றும் ஒருங்கிணைந்த ஊதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ள காலியிடங்கள் 1508. இதில் லேப் டெக்னீசியன் (ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா்) கிரேடு 3 நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இதற்கு விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்

வேலை: Laboratory TechnicianGrade-III

காலியிடங்கள்: 1508

மாத சம்பளம்: ரூ.8,000

கல்வித்தகுதி: 12-ஆம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் மருத்துவக் கல்லூரி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் சி.எம்.எல்.டி ஓராண்டு பயிற்சி முடித்திருப்பதுடன், நல்ல உடலமைப்பு, நல்ல பார்வைத் திறன் மற்றும் வெளிப்புற வேலை செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் சி.எம்.எல்.டி கல்வியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், விதவைகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.300, மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.600 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.

இந்த வேலை குறித்த முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.mrb.tn.gov.in/pdf/2019/LT_Gr_III_2019_Notification_19112019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

அறிவிப்புகள் வெளியிடப்பட்ட தேதி: 19.11.2019

விண்ணப்பிப்பதற்கான் கடைசித் தேதி: 09.12.2019

seithichurul

Trending

Exit mobile version