தமிழ்நாடு

80 கோடி மக்களுக்கு ரூ.26,000 கோடி மதிப்பில் உணவு தானியங்கள்: பிரதமர் அறிவிப்புக்கு எல்.முருகன் நன்றி

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகியுள்ளது. முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு காரணமாக பலர் வேலை இழந்துள்ளதாகவும் வருமானம் இன்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனை அடுத்து ஏழை எளிய மக்களின் வங்கிக் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் சற்று முன்னர் பிரதமர் மோடி அவர்கள் நாட்டில் உள்ள 80 கோடி மக்களுக்கு மே, ஜூன் மாதம் ஆகிய இரண்டு மாதங்களும் இலவசமாக 5 கிலோ தானியங்கள் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவையடுத்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: 80 கோடி மக்களுக்கு ரூ.26,000 கோடி மதிப்பில் இலவசமாக உணவு தானியங்கள். கொரோனா இரண்டாவது அலை மக்களிடம் வேகமாகப் பரவி வருகின்ற காரணத்தினால் 18 வயது நிரம்பியவர்கள் முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடுதல், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்படா வண்ணம் தேசிய அளவில் திட்டமிடல் போன்ற பணிகளில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்து வருகின்றன. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ளதால், இந்தியா முழுவதும் 80 கோடி பயனாளிகளுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

மே&ஜூன் மாதங்களில் இவ்வுதவியை மக்கள் பெறமுடியும். உடனடி நிவாரணமாக இந்த உதவியை அறிவித்த மத்திய அரசுக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். மத்திய மாநில அரசுகள் அறிவிக்கின்ற கொரோனா பாதுகாப்புமுறைகளை பொதுமக்கள் தவறாது கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

seithichurul

Trending

Exit mobile version