இந்தியா

எம்பி ஆனார் எல்.முருகன்: எந்த மாநிலத்தில் இருந்து தெரியுமா?

Published

on

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் அவர்கள் சமீபத்தில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவர் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் என்பதும் அவரை அடுத்து தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அவர்கள் நியமனம் செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற எல்.முருகன் அவர்கள் ஆறு மாதத்திற்குள் ராஜ்யசபா அல்லது மக்களவை எம்பியாக ஆக வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த நிலையில் தற்போது அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள ஒருசில மாநிலங்களில் காலியாக இருக்கும் ராஜ்யசபா எம்பி தேர்தல் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

அந்தவகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து எல் முருகன் எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து எல் முருகன் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ராஜ்யசபா உறுப்பினராக பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்ட எல் முருகன் அவர்களுக்கு பாஜக பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version