தமிழ்நாடு

தாராபுரம் தொகுதியில் எல்.முருகன் தோல்வி: திமுக வேட்பாளருக்கு வெற்றி!

Published

on

தமிழக தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் நட்சத்திர வேட்பாளர்கள் சிலர் முன்னிலையிலும் பின்னடைவிலும் இருந்தனர் என்பதை பார்த்து வந்தோம். அந்த வகையில் காலையில் வாக்குகள் எண்ண தொடங்கியபோது தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் முன்னிலையில் இருந்தார்

தொடர்ந்து அவர் சில மணிநேரம் முன்னிலையில் இருந்ததால் கண்டிப்பாக அவர் வெற்றி பெற்றிருப்பார் என்று எண்ணப்பட்டது. ஆனால் திடீரென மதியத்திற்கு பின் அவர் பின்னடைவில் இருந்தார். இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் கயல்விழி அவர்கள் முன்னிலையில் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

கடந்த சில மணி நேரங்களாக பாஜக மற்றும் திமுக வேட்பாளர்கள் மாறிமாறி முன்னிலையில் இருந்த நிலையில் சற்றுமுன் பாஜகவின் தமிழக தலைவர் எல்.முருகன் தோல்வி அடைந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் கயல்விழி வெற்றி பெற்றுள்ளார். பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது தோல்வி அக்காட்சியின் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version