தமிழ்நாடு

எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டு எல்.முருகன் போட்டோ; அதிமுக – பாஜக இடையே சலசலப்பு!

Published

on

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக, அதிமுகவோடு கூட்டணி வைத்து சந்திக்கிறது. கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு, அதிமுக தரப்பில் 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக, திருவண்ணாமலை, நாகர்கோயில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம்விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி, கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம், மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இதில் பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன், தாராபுரத்திலும், குஷ்பு ஆயிரம் விளக்குத் தொகுதியிலும், அண்ணாமலை அரவக்குறிச்சித் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

பாஜகவின் நட்சத்திர வேட்பாளர்களான இவர்கள் தங்கள் தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முருகன் வயதான மூதாட்டி ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை பாஜக, எம்.ஜி.ஆர் வயதான மூதாட்டியுடன் உள்ள புகைப்படத்தோடு ஒப்பிட்டு ‘வரலாறு திரும்புகிறது’ என்று வாசகத்தோடு சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளது.

இது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னரும் தங்களது பொதுக் கூட்டங்களில் எம்.ஜி.ஆர் படங்களை பயன்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது பாஜக. தற்போதும் அதைப் போல வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

 

 

 

Trending

Exit mobile version