கேலரி

18 வயசுக்கு மாறிய நடிகை குஷ்பு….லைக்ஸ் அள்ளும் புகைப்படங்கள்….

Published

on

90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. ரஜினி, கமல், பிரபு, சத்தியராஜ், சரத்குமார் என அப்போதையை முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். பிரபுவுடன் மிகவும் அதிகமான படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். ஒருகட்டத்தில் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

khushbu

சினிமாவை அடுத்து அரசியலில் அதிக ஆர்வம் காட்டிய அவர் முதலில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அதன்பின் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். அதன்பின் அந்த கட்சியிலிருந்தும் விலகி பாஜகவில் இணைந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியும் அடைந்தார்.

khushbu

குண்டாக இருந்த அவர் கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகவும், மிக அழகாகவும் மாறியுள்ளார். இதைத்தொடர்ந்து தனது புகைப்படங்களை தொடர்ந்து டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிரம் பக்கங்களில் வருகிறார்.

khushbu

இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட், சர்ட் அணிந்து ‘நீங்கள் 18 வயதில் இருக்கும்போது உங்களுக்கு ஜீன்ஸ் பிட்டாக இருக்கும்’ என பதிவிட்டுள்ளார். இந்த தோற்றத்தில் அவரை பார்த்த திரையுலகினரும், ரசிகர்களும் ‘மறுபடியும் ரசிகர்கள் உங்களுக்கு கோவில் கட்டப்போறாங்க’என பதிவிட்டு வருகின்றனர்.

khushbu

Trending

Exit mobile version