தமிழ்நாடு

திமுகவுக்கு BC, OBC, சிறுபான்மையினர் ஓட்டு போடுவார்கள்- உளறிய குஷ்பு; வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

Published

on

பாஜகவைச் சேர்ந்த குஷ்பு, திமுக குறித்துப் பேட்டி ஒன்றில் பேசியுள்ளது மிகுந்த சர்ச்சையாகி வருகிறது. 

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக, அதிமுகவோடு கூட்டணி வைத்து சந்திக்கிறது. கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு, அதிமுக தரப்பில் 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக, திருவண்ணாமலை, நாகர்கோயில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம்விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி, கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம், மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இதில் 17 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியிலை பாஜக இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது. அதன்படி ஆயிரம் விளக்குத் தொகுதியில் குஷ்பு போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்தப் பேட்டியில், ‘திமுகவுக்கு பிசி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் மட்டும் தான் ஓட்டு போடுவார்கள். ஆனால், இந்துக்களின் ஓட்டு அவர்களுக்குக் கிடைக்காது’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். பிசி, ஓபிசி-க்களை இந்துக்கள் இல்லை என்பது போல குஷ்பு பேசியுள்ளதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். 

Trending

Exit mobile version