தமிழ்நாடு

‘அம்மா குடிநீர்’ போல ‘குஷ்பு குடிநீர்’ வாட்டர் பாட்டில் – புது ரக பிரச்சாரம் செய்யும் பாஜக!

Published

on

சென்னையில் உள்ள ஆயிரம் விளக்குத் தொகுதியில் இந்த முறை அதிமுக கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் நடிகை குஷ்பு. அவர் அங்கு பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை, தன் ஆதரவாளர்களுக்கு மத்தியில் தாக்கல் செய்தார் குஷ்பு. இந்த நிகழ்வின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. 

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக, அதிமுகவோடு கூட்டணி வைத்து சந்திக்கிறது. கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு, அதிமுக தரப்பில் 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

அதன்படி வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக, திருவண்ணாமலை, நாகர்கோயில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம்விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி, கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம், மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

குஷ்புவுக்கு ஆதரவாக பாஜகவினர், ஒரு வித்தியாசமான முறையில் ஆயிரம் விளக்குத் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதாவது, தனியார் நிறுவனத்தின் புட்டி நீரை வாங்கி, அதில் குஷ்பு படம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கரை ஒட்டி விநியோகம் செய்துள்ளனர். இது தமிழகத்தின் பேருந்து நிலையங்களில் கிடைக்கும் ‘அம்மா குடிநீர்’ புட்டி போலவே இருக்கிறது. இந்தப் பிரச்சார யுக்தி, கவனத்தை ஈர்த்துள்ளது. 

Trending

Exit mobile version