சினிமா செய்திகள்

கடும் முயற்சியால் எடை குறைந்துள்ளேன்… வைரல் ஆகும் குஷ்பூ புகைப்படம்!

Published

on

கடும் முயற்சிக்குப் பின்னர் உடல் எடை குறைந்துள்ளேன் என நடிகை குஷ்பூ பகிர்ந்துள்ள புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ தற்போது நடிப்பதில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறார். சூப்பர் ரஜினிகாந்த் உடன் சிறுத்தை சிவா இயக்கத்தில் குஷ்பூ தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இதுபோக, சின்னத்திரையில் சிறிய இடைவெளிக்குப் பின்னர் தற்போது மீண்டும் நடித்து வருகிறார்.

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் கோகுலத்தில் சீதை என்னும் தொடரில் குஷ்பூ நடித்து வருகிறார். டாக்டர் மங்களம் என்னும் கதாபாத்திரத்தில் கெளரவ தோற்றத்தில் அந்தத் தொடரில் குஷ்பூ நடித்து வருகிறார். இவர் கடுமையான உழைப்புக்குப் பின்னர் உடல் எடை குறைந்து உள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குஷ்பூவின் புகைப்படம் வைரலாக பல பிரபலங்களும் அவருக்கு ஆதரவாகப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version