தமிழ்நாடு

காப்பி பேஸ்ட் பழசு, கட் அண்ட் பேஸ்ட் தான் புதுசு: ஸ்டாலின் குறித்து குஷ்பு டுவீட்!

Published

on

காப்பி பேஸ்ட் செய்வது பழைய முறை என்றும் கட் செய்து பேஸ்ட் செய்வது தான் புதிய முறை என்றும் நடிகையும் பாஜக பிரபலமான குஷ்பு ட்வீட் ஒன்றை பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் ஏழு உறுதிமொழிகள் என்ற பெயரில் அதிரடி திட்டங்களை அறிவித்தார். இந்த திட்டங்கள் அடுத்த பத்தாண்டு கால லட்சிய பிரகடனம் என்றும் அவர் தெரிவித்தார். பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி, சுகாதாரம், நகர்புற வளர்ச்சி, ஊரக கட்டமைப்பு, சமூக நீதி ஆகியவற்றில் கவனம் செலுத்துவேன் என்றும் அவர் உறுதி கூறினார்.

இது குறித்து நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் கூறியபோது ’காப்பி பேஸ்ட் எல்லாம் பழைய கதை, கட் செய்து பேஸ்ட் செய்வது தான் புதிய முறை. திமுக தலைவர் முக ஸ்டாலின் இந்த புதிய முறையை பின்பற்றுகிறார். அவர் குறிப்பிட்டிருக்கும் அனைத்துமே நம் பிரதமர் நரேந்திர மோடியால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டன.

ஸ்டாலின் கனவு காணும் அனைத்தையும் பாரதிய ஜனதா கடந்த ஆறு ஆண்டுகளில் செய்து முடித்துவிட்டது. ஆனால் ஸ்டாலின் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கனவு மட்டுமே காண்கிறார்; என்று தெரிவித்துள்ளார். குஷ்புவின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version