தமிழ்நாடு
கொரோனா வைரஸ் 2வது டோஸ் எடுத்து கொண்ட நடிகை குஷ்பு: வைரல் புகைப்படம்
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது என்பதும் இன்று ஒரேநாளில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே.
கடந்த சில நாட்களாக 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 4 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள அனைவரும் தடுப்பு ஊசியை செலுத்தி கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் கேட்டுக் கொண்டு வருகின்றன.
அதேபோல அரசியல் பிரபலங்களும் திரையுலக பிரபலங்களும் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டு அதன் புகைப்படங்களை பதிவு செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகையும் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளருமான குஷ்பு ஏற்கனவே கொரோனா வைரஸ் தடுப்பூசி முதல் டோஸ் எடுத்துக் கொண்ட நிலையில் இன்று அவர் இரண்டாவது டோஸ் எடுத்து கொண்டார். இதுகுறித்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்த குஷ்பு, கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதி உள்ளவர்கள் அனைவரும் தயவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்றும் பாதுகாப்பாக அனைவரும் இருங்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
#Healthiswealth Got my 2nd dose of vaccine. ???????????????????????? Now my knee needs to be taken care of. A mild procedure on my left knee ( had a fall during my campaign ) n then will be done. Whoever is eligible, pls go and get vaccinated. Save yourself n others too. #wearmask #GetVaccinated pic.twitter.com/8OCuulWhHd
— KhushbuSundar (@khushsundar) April 8, 2021