தமிழ்நாடு

நடிகர் பிரபுவின் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த குஷ்பு: என்ன காரணம்?

Published

on

நடிகை குஷ்பு திடீரென பிரபுவின் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்திற்கு இன்று காலை நடிகை குஷ்பு சென்று சென்றார். அங்கு சமீபத்தில் பாஜகவில் இணைந்த சிவாஜியின் மகன் ராம்குமார் கணேசனிடம் ஆசி பெற்ற அவர், பின்னர் பிரபு, பிரபுவின் மனைவி, ராம்குமாரின் மனைவி உள்ளிட்ட அனைவரையும் சந்தித்தார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை குஷ்பு போட்டியிடுவதை அடுத்து அவர் சிவாஜி கணேசன் குடும்பத்தினரின் ஆதரவை பெறுவதற்காக அன்னை இல்லத்திற்கு நேரில் சென்றதாக தெரிகிறது. சில மணிநேரம் பிரபுவின் வீட்டில் இருந்த குஷ்பு அதன் பின் அவர்களிடம் விடைபெற்று சென்று திரும்பினார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பு கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அவர் பிரபுவின் வீட்டிற்கும் சென்று ஆதரவு திரட்டி உள்ளார். இது குறித்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை குஷ்பு பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

அந்த டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அல்ல அவர்களின் இல்லத்திற்கு சென்று சமீபத்தில் கட்சியில் இந்த இணைந்த ராம்குமார் கணேசனிடம் ஆசி பெற்றேன். பிரபு உள்பட அனைவரையும் சந்தித்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version