தமிழ்நாடு

மோடிக்கு டாட்டா… ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தி குஷ்பு பிரச்சாரம்- ஷாக்கான பாஜக!!!

Published

on

சென்னையில் உள்ள ஆயிரம் விளக்குத் தொகுதியில் இந்த முறை அதிமுக கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் நடிகை குஷ்பு. அவர் அங்கு பாஜக சார்பில் போட்டியிடுகிறார். 

சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக களமிறங்கும் குஷ்பு, வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள விளம்பரம் ஒன்றில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலைப்படுத்தப்பட்ட உள்ளார். இது பாஜவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குஷ்பவைப் போலவே கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசனும், பிரதமர் மோடியை முன்னிலைப்படுத்தாத விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்படி பாஜக வேட்பாளர்களே மோடியின் படத்தைத் தவிர்த்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

வானதி சீனிவாசனை எதிர்த்து கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ‘பாஜக எதாவது ஒரு தொகுதியலாவது ஜெயிச்சு வந்திடலாம்னுதான் கோவையில வலுவான ஆள நிறுத்தியிருக்காங்க. ஆனா, அவங்களுக்கு எதிரா நான் அங்க நிக்குறேன். என்னோட பாஜக எதிர்ப்பு இதுதான்’ என்று சவால் விட்டுள்ளார். 

Trending

Exit mobile version