சினிமா செய்திகள்

மை ஹீரோ, மை பிரெண்ட், மை விக்ரம்: குஷ்புவின் அசத்தல் டுவிட்!

Published

on

உலக நாயகன் கமலஹாசனுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள நடிகை குஷ்பூ, கமல்ஹாசன் தான் என்னுடைய ஹீரோ, என்னுடைய நண்பர் மற்றும் என்னுடைய விக்ரம் என தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது என்பதும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. மேலும் விக்ரம் திரைப்படம் கடந்த இரண்டு வாரங்களில் 300 கோடி ரூபாயைத் தாண்டி வசூல் செய்து வருகிறது என்றும் இன்னும் வார இறுதி நாட்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக திரை அரங்குகளில் இந்தப் படம் ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விக்ரம் படத்தை பாராட்டி பல திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்த நிலையில் நடிகை குஷ்பு கமல்ஹாசனுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்து புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில் அவர், மை ஹீரோ, மை பிரெண்ட், மை விக்ரம் என்று பதிவு செய்துள்ளார். மேலும் கமலஹாசனுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை குஷ்பு பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களை தற்போது வைரல் ஆகி வருகின்றன.

நடிகை குஷ்பு, கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த ‘சிங்காரவேலன்’, ‘மைக்கேல் மதனகாமராஜன்’ ஆகிய படங்கள் சூப்பர்ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version