சினிமா செய்திகள்

அமைச்சர் பதவியேற்ற ரோஜாவுக்கு வாழ்த்து கூறிய குஷ்பு: வைரல் வீடியோ!

Published

on

இன்று ஆந்திர மாநிலத்தின் அமைச்சர் பதவி ஏற்ற நடிகை ரோஜாவுக்கு நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில அமைச்சரவையை மாற்ற அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்த நிலையில் சமீபத்தில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். இதனை அடுத்து புதிதாக 14 அமைச்சர்களும் ஏற்கனவே உள்ள 11 அமைச்சர்களும் பதவி ஏற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

சற்று முன்னர் பதவி ஏற்பு விழா நடைபெற்ற நிலையில் அதில் நடிகை ரோஜாவும் அமைச்சராக பதவியேற்றார். அவர் அமைச்சர் பதவி ஏற்றவுடன் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் காலில் விழுந்து ஆசி பெற்றார் என்பதும் கவர்னருக்கும் தனது வணக்கத்தை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை குஷ்பு அமைச்சராக பதவியேற்ற ரோஜா செல்வணிக்கு தனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். குஷ்பு மற்றும் ரோஜா சமகாலத்தில் நாயகிகளாக தமிழ் சினிமாவில் நடித்தவர்கள் என்பதும் இருவரும் இணைந்து சில படங்களில் நடித்து உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version