தமிழ்நாடு

குஷ்புவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி? வேட்புமனுவில் தெரிவித்த தகவல்!

Published

on

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு தனக்கு எத்தனை கோடி சொத்துக்கள் உள்ளன என்பது குறித்த தகவலை தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட நேற்று குஷ்பு வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அந்த மனுவில் தனது பெயரில் 18 கோடி ரூபாய் அசையா சொத்துக்கள் உள்ளதாகவும், 4.5 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதில் சுமார் 9 கிலோ தங்கம், 78 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளதாகவும் மொத்தம் தனக்கு 22.5 கோடி சொத்துக்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது கணவர் பெயரில் 16.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களும் 1.8 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். கணவருக்கு 3 கார் சொந்தமாக இருப்பதாகவும் 495 கிராம் தங்க நகைகள் ஒன்பது கிலோ வெள்ளியும் இருப்பதாகவும் தனது வேட்பு மனுவில் குஷ்பு தெரிவித்துள்ளார்.

மேலும் தனது கணவருக்கு 55.55 லட்சம் லட்சம் கடன் உள்ளது என்றும் தான் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்ததாகவும் அவர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version