தமிழ்நாடு

பாஜக வேட்பாளர்களாக குஷ்பு, கெளதமி போட்டியிடும் தொகுதிகள் குறித்த தகவல்!

Published

on

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றன.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 25 முதல் 30 தொகுதிகளை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் பாஜகவில் போட்டியிடும் பிரமுகர்கள் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

மதுரை தெற்கு தொகுதியில் ஏஆர் மகாலட்சுமியும், காரைக்குடி பகுதியில் பிஆர் செந்தில்நாதன், ராஜபாளையம் பகுதியில் நடிகை கெளதமிம் சேப்பாக்கம் தொகுதியில் நடிகை குஷ்புவும் மயிலாப்பூர் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் இவர்களுக்கு கிட்டத்தட்ட இந்த தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கோவை மற்றும் சென்னையில் மேலும் ஒரு சில தொகுதிகளில் பாஜக பிரமுகர்கள் போட்டியிடுவார்கள் என்றும் சென்னையில் உள்ள முக்கிய தொகுதியில் பாஜக தமிழக தலைவர் எல் முருகன் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. அனேகமாக திமுக தலைவர் முக ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

அதிமுக மற்றும் பாஜக தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை குறித்து பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட இருக்கும் நிலையில் தற்போது வேட்பாளர்கள் குறித்த தகவல் கசிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Trending

Exit mobile version