தமிழ்நாடு

பாஜக வேட்பாளராக குஷ்பு, கெளதமி: விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு!

Published

on

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 மக்களவை தொகுதிகளும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகள் எவை எவை என்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில் தற்போது பாஜக வேட்பாளர்களின் உத்தேச பட்டியலும், அவர்கள் போட்டியிடவுள்ள தொகுதிகள் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது,

இதன்படி பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அவர்கள் ராசிபுரம் தொகுதியிலும், அண்ணாமலை கிணத்துக்கடவு தொகுதியிலும், கேடி ராகவன் மயிலாப்பூர் தொகுதியிலும், எச் ராஜா காரைக்குடி தொகுதியிலும், வானதி ஸ்ரீனிவாசன் கோவை தெற்கு தொகுதியிலும், குஷ்பூ திருவல்லிக்கேணி தொகுதியிலும், நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியிலும், கௌதமி ராஜபாளையம் தொகுதியிலும், போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த பட்டியலில் குஷ்பு மற்றும் கௌதமி ஆகிய இரண்டு நடிகைகள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது/ இந்த உத்தேச பட்டியல் அப்படியே பாஜக வேட்பாளர் பட்டியலிலும் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version