சினிமா

அதர்வா-வின் ‘குருதி ஆட்டம்’- தெறிக்கும் டீசர்..!

Published

on

நடிகர் அதர்வா மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘குருதி ஆட்டம்’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

8 தோட்டாக்கள் திரைப்பட புகழ் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்கி உள்ளார். அதர்வா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் உடன் நடிகை ராதிகா, ராதா ரவி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

திரையரங்குகளில் மட்டுமே வெளியிடும் முடிவில் படக்குழுவினர் உள்ளனர்.  இதனால் அதிகாரப்பூர்வ பட வெளியீட்டுத் தேதி அறிவிக்க முடியவில்லை என திரைப்பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் தெரிவித்துள்ளார். படம் பெரும்பாலும் மதுரை நகரை மையமாகக் கொண்டே எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version