தமிழ்நாடு

சீமானுக்கு எதிராக போட்டியிடும் குப்பன்: வெற்றி பெறுவது யார்?

Published

on

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் சற்று முன்னர் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது என்பது தெரிந்ததே. 171 வேட்பாளர் பட்டியல்களில் பல்வேறு ஆச்சரியங்கள் அதிசயங்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் சீமானை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என்று பலர் அந்த பட்டியலில் தேடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சீமான் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குப்பன் என தெரியவந்துள்ளது.

இவர் திருவொற்றியூர் மேற்கு கழக செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இவர் ஏற்கனவே திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்தார் என்பதும் உள்ளூரில் நல்ல செல்வாக்குடன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே நாம் தமிழர் கட்சியின் சீமான் இவரை எதிர்த்து வெற்றி பெறுவாரா அல்லது குப்பன் மீண்டும் எம்எல்ஏவாக வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Trending

Exit mobile version