சினிமா செய்திகள்

குமுதா இப்போ ‘தல’ ரசிகையாக மாறிவிட்டாராம்!

Published

on

அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா. அந்த படத்தை விட, விஜய்சேதுபதியுடன் அவர் ஜோடியாக நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதாவாக நடித்து, மக்களின் மனங்களில் விஜய்சேதுபதியுடன் சேர்ந்து இவரும் பதிவாகி விட்டார்.

பின்னர், முண்டாசுப்பட்டி, புலி, கலகலப்பு2 போன்ற படங்களில் நடித்த நந்திதா, தற்போது, பிரபுதேவா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள தேவி 2 படத்தின் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

தேவி 2 படம் அடுத்த மாதம் 12ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்புக்கு பின்னர், ரசிகர்களை ட்விட்டரில் தொடர்பு கொண்டுள்ளார் நடிகை நந்திதா. அப்போது அவரிடம், உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்? என்ற கேள்வியை ஒரு ரசிகர் முன்வைக்க, விஸ்வாசம் படத்திற்கு பிறகு நான் தல ரசிகையாக மாறிவிட்டேன் என நந்திதா விடையளித்துள்ளார்.

மேலும், நந்திதா போலீஸ் கதாபாத்திரத்தில் முதன்முறையாக ஐபிசி376 படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ரோலில் நடித்து வருகிறார்.

seithichurul

Trending

Exit mobile version