இந்தியா

கும்பமேளா முடிந்துவிட்டதாக கூறி வீடு திரும்பும் சாமியார்கள்: என்ன காரணம்?

Published

on

ஹரித்துவாரில் கும்பமேளா திருவிழா விசேஷமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென சாமியார்கள் கும்பமேளா திருவிழா முடிந்து விட்டதாக கூறி வீடு திரும்பி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஹரித்துவாரில் கும்பமேளா திருவிழா சமீபத்தில் தொடங்கிய நிலையில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சாதுக்களும் சாமியார்களும் குவிந்தனர் என்பதும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தது என்றும் கூறப்படுகிறது

நேற்று ஒரே நாளில் கும்பமேளாவில் கலந்து கொண்ட பக்தர்கள் 2000 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் கும்பமேளா திருவிழாவை கலந்து கொள்வதற்காக மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மகா நிர்வாணி அகாரா என்ற அமைப்பின் தலைவர் கபிலேஷ், ஹரித்துவாருக்கு வந்திருந்தார்

இந்த நிலையை அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் சற்று முன் உயிரிழந்ததாக தெரிகிறது. கும்பமேளா அமைப்பின் தலைவரான மகா நிர்வாணி அகாரா என்ற காவியுடை சாமியார்களின் அமைப்பின் தலைவரே கொரோனாவுக்கு பலியானதை அடுத்து கும்பமேளா முடிந்து விட்டதாக கூறி ஆயிரக்கணக்கான சாமியார்கள் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் கர்நாடகா, உத்தரபிரதேச,ம் மத்திய பிரதேசம் உள்பட ஒருசில மாநிலங்களில் இருந்து வீடு திரும்பும் சாமியார்கள் மற்றும் பக்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி இல்லை என்றால் மட்டுமே மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் அவர்கள் தனிமைபடுத்தப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

seithichurul

Trending

Exit mobile version