தமிழ்நாடு

கும்பகோணம் நினைவு நாள்: 17ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் மக்கள்!

Published

on

கடந்த 2004ஆம் ஆண்டு கும்பகோணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பலியான அதிர்ச்சி சம்பவத்தின் 17-வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 17 வது நினைவு தினம் இன்று அந்தப் பகுதி மக்களால் அனுசரிக்கப்பட்டு குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

கும்பகோணம் பள்ளியில் கடந்த 2004ஆம் ஆண்டு நடந்த தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் குழந்தைகளை இழந்த குடும்பங்களின் சார்பில் மௌன அஞ்சலி உள்பட மரியாதையின் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தீ விபத்து நடந்த கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள பள்ளி முன்பு இந்த நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. பலியான 94 குழந்தைகளின் புகைப்படங்களை அலங்கரித்து பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், உள்ளூர் பிரமுகர்கள், தன்னார்வ அமைப்பினர் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்துகின்றனர்.

அதன்பின்னர் 94 குழந்தைகளின் பெற்றோர்களும் பழைய பாலக்கரை என்ற பகுதியில் உள்ள பலியான குழந்தைகளின் நினைவிடத்திற்கு சென்று சில நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்துவார்கள் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version