தமிழ்நாடு

கும்பகோணம் ஐயர் சிக்கன்; கொந்தளித்த பிராமணர்கள்: மன்னிப்பு கேட்ட ஹோட்டல் நிர்வாகம்!

Published

on

மதுரையில் உள்ள மிளகு என்ற ஹோட்டல் தங்களின் ஸ்பெஷல் சிக்கன் உணவிற்கு கும்பகோணம் ஐயர் சிக்கன் என பெயர் வைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த பெயர் விவகாரம் பிராமணர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக பிராமணர்களிடையே ஒரு சமூக கட்டுப்பாடு உள்ளது. அவர்கள் சைவ உணவைத்தான் சாப்பிடுவார்கள். யாராவது அதில் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் பிராமணர்கள் அசைவத்தை சாப்பிட மாட்டார்கள் என்பது அவர்களது நடைமுறை பழக்கவழக்கம். நம்மில் கூட யாருக்காவது அசைவம் பிடிக்காது என்றால் நீ என்ன பிராமணனா? என கேட்பது உண்டு. அந்த அளவுக்கு பிராமணர்கள் அசைவ உணவை ஒதுக்கி வைப்பர்.

ஆனால் அவர்கள் பெயரில் அசைவ உணவான சிக்கனுக்கு பெயர் வைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளது மதுரையில் உள்ள மிளகு ஹோட்டல். இவர்கள் புதிதாக ஒரு சிக்கன் ஸ்பெஷல் ஐட்டத்துக்கு சிக்கன் 007 என பெயர் வைத்தனர். ஆனால் அந்த பெயருக்கும் ஐட்டத்துக்கும் அதிக வரவேற்பும் கிடைக்காததால் விளம்பர யுக்தி ஒன்றை கையாண்டுள்ளனர்.

விளம்பரத்துக்காக கும்பகோணம் ஐயர் சிக்கன் என பெயர் வைத்துள்ளனர். இப்படி பெயர் வைத்தால் கண்டிப்பாக சர்ச்சையில் சிக்குவோம் அதன் மூலம் இந்த பெயர் பிரபலமாகும் என தெரிந்தே, திட்டமிட்டு இந்த பெயரை அந்த சிக்கனுக்கு வைத்துள்ளனர். இதனை சமூக வலைதளங்களிலும் விளம்பரப்படுத்த, இதனை பார்த்த பிராமணர்கள் எதிர்பார்த்தது போலவே எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆவேசத்துடன் மிளகு ஹோட்டலில் முற்றுகையிட்ட பிராமணர்கள் ஹோட்டல் நிர்வாகத்தினரை பிடிபிடியென பிடித்தனர். தொடர்ந்து ஒருங்கினைந்த தமிழ்நாடு பிராமணர்கள் சங்கத்தினரிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்துள்ளது ஹோட்டல் நிர்வாகம். அதில் தனிப்பட்ட சமூகத்தினரை துன்புறுத்தும்படி இனி விளம்பரம் செய்யமாட்டோம் என்று உறுதியும் அளித்தனர்.

seithichurul

Trending

Exit mobile version